பசுமை தோட்டமாக மாறிய சேலம் சிறைச்சாலை : வியப்பை ஏற்படுத்தும் சிறைவாசிகள்
சிறைக் காவலர்களின் புதுமை முயற்சியாலும், கைதிகளின் கடின உழைப்பாலும், சேலம் சிறைச்சாலை பசுமை பூந்தோட்டமாக மாறியுள்ளது.
சேலம் மத்திய சிறைச்சாலையில், பல்வேறு காய்கறிகள் பயிரிடப்பட்டு, விவசாய தோட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மத்திய சிறைச்சாலைகளில் நல்ல நடத்தை மற்றும் விவசாயம் தெரிந்த சிறைவாசிகளை தேர்ந்தெடுத்து, இந்த விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சேலம் மத்திய சிறை பசுமை தோட்டமாக மாறியுள்ளது சாதாரண விவசாயிகளுக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தந்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த சேலம் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், தோட்ட வேலைகளில் ஈடுபடும் சிறைவாசிகளுக்கு தண்டனை நாள்கள் குறைக்கப்படும் என்றார்.