தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்கு : இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்

தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக முதலமைச்சர் சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Update: 2019-07-05 03:41 GMT
தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக முதலமைச்சர் சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் சோழிங்கநல்லூரில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலின், முதலமைச்சர் குறித்து பேசியிருந்தார். இதையடுத்து அவர் மீது செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஸ்டாலின் , உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்