6 மாதம் பரோல் கேட்டு நளினி வழக்கு : நளினி இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியான நளினி நாளை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

Update: 2019-07-04 21:15 GMT
28 ஆண்டுகளாக  சிறையில் இருக்கும் நளினி, லண்டனில் வசிக்கும் தனது மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்கு 6 மாத பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தானே நேரில் ஆஜராகி வாதாட அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார். நளினியை ஆஜர்படுத்துவதில் பாதுகாப்பு பிரச்னைகள் இருப்பதாகவும், காணொளி காட்சி மூலம் ஆஜராகி வாதிடலாம் எனவும் அரசுத்த ரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க நளினி மறுத்து விட்டார். இதையடுத்து,  நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், நிர்மல் குமார் அமர்வு, நளினியை இன்று ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டது. இதன்படி, நளினி பிற்பகல் 2.15 மணிக்கு ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்