பழனி உழவர் சந்தையில், புறக்கணிக்கப்படும் உழவர்கள் : வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக குற்றச்சாட்டு

பழனியில், வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக குற்றம்சாட்டிய விவசாயிகள், உழவர் சந்தை நிர்வாக அலுவலரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-04 20:11 GMT
பழனியில், வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக குற்றம்சாட்டிய விவசாயிகள், உழவர் சந்தை நிர்வாக அலுவலரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 15 ஆண்டுளாக செயல்பட்டு வரும், உழவர் சந்தையில், தங்கள் உற்பத்தி பொருளை விற்று வந்த விவசாயிகள், அதற்கு கடும் இடையூறு ஏற்படுத்துவதாக நிர்வாக அலுவலர் பிச்சை மீது குற்றம்சாட்டினர். மொத்த வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதால், தங்கள் பொருட்களை விற்க முடியவில்லை என குற்றம்சாட்டிய அவர்கள், முற்றுகை செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த வேளாண் அதிகாரிகள், தவறுகள் இனி நடக்காது என கூறி, விவசாயிகளை சமாதானம் செய்ததை தொடர்ந்து, முற்றுகை கைவிடப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்