மாற்று திறனாளிகளின் உதவித்தொகை நிறுத்தி வைப்பு - மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க வேண்டும் : மனித உரிமை ஆணையம் உத்தரவு
நாகை மாவட்டம் திருமணஞ்சேரியை சேர்ந்த முரளி என்பவரின் குடும்பத்தில் 6 பேர் மாற்று திறனாளிகளாக உள்ளனர்.
நாகை மாவட்டம் திருமணஞ்சேரியை சேர்ந்த முரளி என்பவரின் குடும்பத்தில் 6 பேர் மாற்று திறனாளிகளாக உள்ளனர். முரளியின் சகோதரர் பாலாஜி நடத்தி வந்த மாற்று திறனாளிகள் சுய உதவிக்குழுவில் உள்ள சிலர் வங்கியில் வாங்கிய கடன் தொகையை சரிவர செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் குழுவின் தலைவரான பாலாஜி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் ஊனமுற்றோர் உதவித்தொகையை வங்கி நிர்வாகம், 6 மாதங்களாக நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியானது. இதுதொடர்பாக வெளியான செய்தியை தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்த மனித உரிமை ஆணையம் இதுதொடர்பான விளக்கத்தை நாகை மாவட்ட ஆட்சியர் 4 வாரத்துக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.