ராமலிங்கம் கொலை வழக்கு : தென்காசி ஜல்லி மைதீனின் வீட்டில் அதிரடி சோதனை...

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் கைதானவர் வீட்டில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-03 06:03 GMT
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் கைதானவர் வீட்டில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர். தென்காசியைச் சேர்ந்த ஜல்லி மைதீன் என்ற அகமது ஷாலிக்கை கடந்த 27ஆம் தேதி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதை தொடர்ந்து மீண்டும் அவரது வீட்டில் புலனாய்வு துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், எழுபது போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். கொச்சியில் இருந்து வந்துள்ள தேசிய புலனாய்வு முகமை டி.எஸ்.பி. ஜஸ்வீர் சிங் தலைமையிலான, அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்