சதுரகிரி கோவிலில் மீண்டும் அன்னதானம் வழங்க கோரிக்கை : உரிய நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு உத்தரவு

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவிலில் அன்னதானத்திற்கு மீண்டும் அனுமதி வழங்க கோரிக்கை விடுத்த மனுவை, பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

Update: 2019-07-02 19:45 GMT
சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலில், ஒவ்வொரு அமாவாசை, பெளர்ணமி மற்றும் விழாக்காலங்களில் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கோவில் அருகே தனியார் உணவங்கள் அமைக்க கோவில் நிர்வாகம் அனுமதி அளித்ததை அடுத்து, அன்னதானம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தனியார் உணவகத்தில் உணவுகள் அதிக விலையில் விற்கப்படுவதால், பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகவும், எனவே அன்னதானத்திற்கு மீண்டும் அனுமதி வழங்க கோரியும், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன், புகழேந்தி அமர்வு, மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு உத்தரவிட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்