கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட விவகாரம் : குற்றம் சாட்டப்பட்டவர்கள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் ஒன்பது பேர் விடுதலையை எதிர்த்து சிபிசிஐடி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க ​வேண்டும் என, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-07-02 19:29 GMT
கன்னட திரைப்பட நடிகர்  ராஜ்குமார், கடந்த 2000 மாவது ஆண்டு கடத்தப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்து கோபி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கோவை சிபி சி ஐ டி துணை கண்காணிப்பாளர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாகவும், அதை கீழமை நீதிமன்றம் கவனிக்க தவறிவிட்டதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்கும்படி 9 பேருக்கும் உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்