பேருந்து பயண அட்டைக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு : சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பேருந்து பயண அட்டை வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க, ஸ்மார்ட் கார்டு மூலமாகவே பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாக சட்டப்பேரவையில், அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பேருந்து பயண அட்டை வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க, ஸ்மார்ட் கார்டு மூலமாகவே பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாக சட்டப்பேரவையில், அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கல்வித் துறை மானியக் கோரிக்கையில் பேசிய தி.மு.க. உறுப்பினர் எழிலரசன், தற்போது வரை மாணவர்களுக்கு இலவச பயண அட்டை வழங்கப்படவில்லை என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், இலவச பயண அட்டைக்கு பதிலாக , மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள ஸ்மார்ட் கார்டிலேயே அந்த வசதியை ஏற்படுத்தலாமா என ஆலோசித்து வருவதாகவும், அத்திட்டம் அமலுக்கு வரும் நிலையில், இலவச பயண அட்டை வழங்கும் நடவடிக்கை தேவைப்படாது என தெரிவித்தார்.