நினைவு அறக்கட்டளை பெயரில் ரூ.2000 கோடி மோசடி - ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டோர் புகார்

நினைவு அறக்கட்டளை பெயரில் ரூ.2000 கோடி மோசடி செய்த நபர் மீது ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டோர் புகார் அளித்தனர்.

Update: 2019-07-01 13:54 GMT
வெளிநாட்டில் இருந்து தங்களது அறக்கட்டளைக்கு பணம் வருவதாக கூறி, 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த நபர் மீது ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டோர் புகார் அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் ரவிச்சந்திரன் என்பவர் தலைமையில் இயங்கிவரும் சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் பெயரில் விளம்பரம் வெளியானது. அதில், தங்களது அறக்கட்டளையில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக கூறி, பணம் பெற்றுக் கொண்டவர்களின் படங்களை வெளியிட்டிருந்தனர். இதை பார்த்த, ஏற்கனவே அறக்கட்டளையில் பணம் கொடுத்து ஏமாந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கருணாமூர்த்தி, சகுந்தலா, சுதா, ஆனந்தன் ஆகிய நால்வரும் புகாரளித்தனர். அதில், அறக்கட்டளை பெயரில்மோசடி நடப்பதாக குற்றம்சாட்டினர். 
Tags:    

மேலும் செய்திகள்