சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் சில தினங்களுக்கு முன்பு, அவரது வீட்டருகே பிணமாக கிடந்தார். போலீசார், அதனை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மனைவி தாமரைச்செல்வி கீரப்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி முத்துலட்சுமியிடம் சரணடைந்தார்.
சீனிவாசனுடன் அவருக்கு கள்ள தொடர்பு இருந்ததை ஒப்புக்கொண்ட தாமரைச்செல்வி, இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவருடைய கணவரிடம் காண்பித்துவிடுவேன் என்று சீனுவாசன் மிரட்டியதாகவும் அப்போது தெரிவித்தார். இதனால் தனது தாயாருடன் சேர்ந்து சீனிவாசனை கொலை செய்ததை தாமரைச்செல்வி ஒப்புக்கொண்டதையடுத்து, அவரையும், அவரது தாயாரையும் போலீசார் கைது செய்தனர்.