நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் புதிய திட்டம் துவக்க விழா : அமைச்சர் பெஞ்சமின் ஆய்வு
நெம்மேலியில் கடல் நீர் சுத்திகரிப்பு புதிய ஆலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டவுள்ள நிலையில் அங்கு விழா மேடை அமைக்கப்பட்டு வருகிறது.
நெம்மேலியில் கடல் நீர் சுத்திகரிப்பு புதிய ஆலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டவுள்ள நிலையில், அங்கு விழா மேடை அமைக்கப்பட்டு வருகிறது. புதிய சாலைகள் போடும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து விழா முன்னேற்பாடுகளை ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் ஆய்வு செய்தார். நிகழ்ச்சி குறித்து பெஞ்சமின் குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.