இந்தியாவின் ஆட்சி மொழியா இந்தி?...பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் சர்ச்சை
ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில், 'இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி' எனக் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில், 'இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி' எனக் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில், இந்த ஆண்டு புத்தகங்கள் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளன. அதில் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தின் 210வது பக்கத்தில், மொழிகள் குறித்த பாடம் இடம் பெற்றுள்ளது. அதில், இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி மட்டுமே என கூறி இருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவிற்கு தேசிய மொழி, ஆட்சி மொழி என பிரிவுகள் கிடையாது என குறிப்பிடும் வரலாற்று ஆசிரியர்கள், உடனடியாக பள்ளிக்கல்வித்துறை உரிய திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளனர்.