கந்திலி ஊராட்சியில் குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகை

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஊராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-06-19 18:48 GMT
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஊராட்சியில் 
கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு ஒரு முறை விடப்படும் குடிநீரும் அதிகளவில் உப்பு கலந்து உள்ளதால் 600 ரூபாய் கொடுத்து டிராக்டர் மூலம் தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததை கண்டித்து காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டம் நடத்தினால் தண்ணீர் கொடுத்துவிடுவோமா என்று வட்டார வளர்ச்சி அலுவலர் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்