திருவிடைமருதூர் அருகே மழை வேண்டி சூரியனுக்கு மகா அபிஷேகம் செய்து பெண்கள் வழிபாடு
திருவிடைமருதூர் அருகே உள்ள சூரியனார் கோயிலில் சூரியன் மூலவராகவும் ஏனைய கிரகங்கள் சூரியனைச் சுற்றி தனித்தனி சன்னதிகளிலும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றன.
திருவிடைமருதூர் அருகே உள்ள சூரியனார் கோயிலில் சூரியன் மூலவராகவும் ஏனைய கிரகங்கள் சூரியனைச் சுற்றி தனித்தனி சன்னதிகளிலும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றன. நவக்கிரகங்களுக்கு என்று அமைந்துள்ள இக்கோவிலில் மழை வேண்டி சூரியனுக்கு மகா அபிஷேகம் செய்து பெண்கள் வழிபாடு செய்தனர். முன்னதாக மழை வேண்டி சிறப்பு ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் சூரிய பெருமானுக்கு திருமண மண்டபத்தில் பால் சந்தனம் பன்னீர் என பலவகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
மழைவேண்டி நடந்த வருணஜெபம் :
நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கஜா புயல் பிறகு குறிப்படத்தக்க அளவில் மழை பெய்யவில்லை. இதனால், ஆறுகள், வாய்க்கால்கள், குளங்கள், ஏரிகள் அனைத்தும் வறண்டு விட்டன.. நிலத்தடி நீர்மட்டம் மிகவும் கீழே சென்று விட்டது. இந்த நிலையில், பருவமழை வேண்டி , மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில், ருத்ரஹோமம், வருணஜெபம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து நாதஸ்வரத்தில், அமிர்தவர்ஷினி, ஆனந்தபைரவி ராகங்கள் வாசிக்கப்பட்டன. ஆலய திருக்குளத்தில், கழுத்தளவு நீரில் நின்றபடி, சிவபுரம் வேத சிவாகம பாடசாலை மாணவர்கள் 9 பேர் 1மணிநேரம் , வருண ஜெபம் செய்தனர்.
மழைவேண்டி நடந்த யாகம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
தமிழகத்தில் முதன் முறையாக அனைத்து ஜோதிட பிரபஞ்ச குழுவினர் சார்பாக முக்கிய நகரங்களில் மழை வேண்டி யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டது . அதன்படி கோவை ராமர் கோவில் அருகே மகா பிரபஞ்ச யாகம் நடைபெற்றது. மாநிலத்தின் தொழில் மேன்மையடையவும், திருமண தடை நீங்கவும் ,குழந்தை பாக்கியம் பெறவும் , ராகு கேது தோஷங்கள் நீங்கவும் வேண்டிக் கொண்ட பக்தர்கள் யாகத்தில் பங்கேற்றனர்.