"மழை நீரை சேமிக்க நடவடிக்கை இல்லை" - வேல்முருகன்
தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை இல்லை என்றால், போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சிதலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை இல்லை என்றால், போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சிதலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். 'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு' என்ற தலைப்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஆலோசனை கூட்டம் நாகையில் நடைபெற்றது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் வரும் 23ஆம் தேதி நடத்தும் மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், மழை நீரை சேமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.