"நிலா குறித்து ஆராய்ச்சி அடுத்த கட்டத்திற்கு செல்லும்" - சந்திராயன் 2 குறித்து மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்
நிலாவில் அடுத்தக் கட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு சந்திராயன் 2 விண்கலம் பயன்படும் என்று தமிழ்நாடு அறிவியியல் தொழில் நுட்ப குழு துணைத்தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
நிலாவில் அடுத்தக் கட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு சந்திராயன் 2 விண்கலம் பயன்படும் என்று தமிழ்நாடு அறிவியியல் தொழில் நுட்ப குழு துணைத்தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சந்திராயன் ஒன்று மூலம் நிலவில் தண்ணீர் இருப்பது தெரியவந்ததாக குறிப்பிட்டார். சந்திராயன் 2 மூலம் நிலவை நாம் எப்படி பயன்படுத்த முடியும் என்பது தொடர்பான ஆராய்ச்சி அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று மயில்சாமி அண்ணாதுரை கூறினார். செயற்கை கோள்கள் ஏவப்படுவதால் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்படுவதாக சொல்வது உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் தெரிவித்தார்.