வழக்கறிஞரை கொடூரமாக கொன்று சாம்பலாக்கிய கொடூரன் ...குமரியில் அதிர்ச்சி

Update: 2024-11-07 14:41 GMT

கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி இசக்கிமுத்து. இவருக்கு நிலம் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டதால் பூதப்பாண்டியில் உள்ள வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சோபியை அனுகி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இசக்கி முத்துவிற்க்காக பூதப்பாண்டியில் உள்ள நீதிமன்றத்தில் வாதாடி வந்து இருக்கிறார் கிறிஸ்டோபர் சோபி.இந்த நிலையில் நிலத்தில் அசல் ஆவணங்களை வழக்கிற்காக வாங்கிய கிறிஸ்டோபர் சோபி அதனை இசக்கிமுத்துவிடம் திருப்பி அளிக்காமல் காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது.மேலும் நிலம் வழக்கில் இசக்கிமுத்துவிற்கு சாதகமாக கிறிஸ்டோபர் சோபி வாதாடாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.இதனால் இருவருக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.இந்த நிலையில் கிறிஸ்டோபர் சோப்பிக்குக் கட்டணம் தருவதாகக் கூறி பீமநகரி பகுதிக்கு இசக்கி முத்து வரவழைத்து இருக்கிறார். அப்போது இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் கிறிஸ்டோபர் சோபியை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு பின்னர்அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து இருக்கிறார். இதன் பின்னர் இசக்கி முத்து காவல் நிலையம் சென்று சரணடைந்து இருக்கிறார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசரானை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்