உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு : கெட்டுப்போன கோழிக்கறி, நெய் உள்ளிட்டவை பறிமுதல்

கொடைக்கானலில் ஏழுரோடு சந்திப்பில் உள்ள தனியார் உணவு விடுதியில் தரமற்ற உணவுகள் அதிக கட்டணத்துடன் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் வந்தது.

Update: 2019-06-13 21:59 GMT
கொடைக்கானலில் ஏழுரோடு சந்திப்பில் உள்ள தனியார் உணவு விடுதியில் தரமற்ற உணவுகள் அதிக கட்டணத்துடன் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் வந்தது. அதைதொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் நடராஜன் மற்றும் கண்ணன் ஆகியோர் அந்த உணவு விடுதியில்  ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் 15 கிலோ கெட்டுப்போன கோழிக்கறி, 20 கிலோ மாவு, 2 கிலோ நெய் உள்ளிட்ட பொருட்களையும் காலாவ‌தியான‌ 4 லிட்ட‌ர் த‌யிர் உட்ப‌ட‌ உணவுப் பொருட்களையும் பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்து குப்பையில் கொட்டினர். தொடர்ந்து இதுபோன்று தரமற்ற உணவுகளை விநியோகித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு விடுதி நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்