"அணுசக்தியை விட ஆபத்தானது அணு கழிவு" - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் எக்காரணம் கொண்டும் அணுகழிவுகளை புதைக்ககூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் எக்காரணம் கொண்டும் அணுகழிவுகளை புதைக்ககூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் பணகுடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூடங்குளத்தில் முதல் இரண்டு அணு உலைகள் தொடங்கி 3,4,5,6 என அணு உலைகள் அமைக்கும் பணிகள் துவங்கப்படுவவதாக தெரிவித்தார். அதனால் வரக்கூடிய கழிவு, அணுசக்தியை விட ஆபத்தானது என்று குறிப்பிட்ட நல்லகண்ணு, அதனை புதைக்காமல் வேறு இடத்திற்கு சென்று அழிக்க விஞ்ஞானிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.