"தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை அ.தி.மு.க ஆட்சி நிறைவேற்றவில்லை" - தி.மு.க. எம்.பி. கனிமொழி
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு எந்த நிரந்தர தீர்வையும் ஏற்படுத்தவில்லை என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு எந்த நிரந்தர தீர்வையும் ஏற்படுத்தவில்லை என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடிநீர் பிரச்சினையை தீர்க்க திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறினார். இந்த திட்டங்களை நிறைவேற்றி இருந்தாலே குடிநீர் பிரச்சினை தீர்ந்து இருக்கும் என்றும் கனிமொழி சுட்டிக்காட்டினார்.