திருப்பதியில் தமிழக பக்தர்கள் மீது தாக்குதல் : திருமலைக்கு புகையிலை எடுத்துச் சென்றதாக புகார்
செங்கல்பட்டு மாவட்டம் மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த 40 பேர், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக சென்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த 40 பேர், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக சென்றனர். அப்போது திருமலைக்கு செல்லும் அலிபிரி சோதனைச்சாவடி சோதனையில், கன்னியப்பன் என்பவரிடம் இருந்து புகையிலையை கைப்பற்றி காவலர்கள் குப்பையில் வீசியுள்ளனர். அதை கன்னியப்பன் எடுக்க முயன்றபோது காவலர்கள் அவரை தாக்கியுள்ளனர். இதை தட்டிக்கேட்ட உறவினர்களை தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் தாக்குதல் தொடர்பாக வெளியே தெரிவித்தால் பொய் வழக்கு பதிவு செய்யப்படும் என்று மிரட்டியதாக தாக்குதலுக்கு உள்ளானவர்கள் புகார் கூறியுள்ளனர்.