காப்பக பெண்களுக்கு சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
திருச்சியில் உள்ள தனியார் காப்பகத்தில் தங்கியுள்ள இளம்பெண்கள், அனைவருக்கும் அனைத்து சான்றிதழ்களையும் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில் உள்ள தனியார் காப்பகத்தில் தங்கியுள்ள இளம்பெண்கள், அனைவருக்கும் அனைத்து சான்றிதழ்களையும் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. காப்பகத்தை சேர்ந்த 86 பெண்களும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ரவிச்சந்திர பாபு, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, காப்பகத்தில் தங்கியிருக்கும் இளம் பெண்கள் அனைவருக்கும் நிபந்தனைகள் இல்லாமல் உடனடியாக அனைத்து சான்றிதழ்களையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.