காற்றில் பறந்த அரசு பேருந்தின் மேற்கூரை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதியில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதியில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. அப்போது அரசு நகரப் பேருந்து ஒன்று வடக்கி பாளையத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து கொங்கு நாட்டன் புதூர் பிரிவில் வந்த போது, பலத்த காற்று வீசியதால் மேற்கூரை திடீரென பெயர்ந்து சாலையோரம் விழுந்தது. அதில் பயணம் செய்த பயணிகள் அலறி உள்ளனர். இதனை அடுத்து நிறுத்தப்பட்ட பேருந்து, சிறிது நேரத்தில் சீரமைக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது.