யானை பிச்சை எடுக்க செய்து துன்புறுத்தப்படுவதாக வழக்கு : வனத்துறையினர் பராமரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அந்தமானில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தானமாக வழங்க அனுப்பி வைக்கப்பட்ட யானையை வனத்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் பராமரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-06-13 19:10 GMT
அந்தமானில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தானமாக வழங்க அனுப்பி வைக்கப்பட்ட யானையை வனத்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் பராமரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்தமானை  சேர்ந்த மாசன் என்பவர் தனக்கு சொந்தமான மலாச்சி என்ற யானையை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தானமாக வழங்குவதற்காக இந்திரா என்பவருக்கு அனுப்பி வைத்தார். அந்த யானையை கோவிலுக்கு வழங்காமல், பிச்சை எடுக்கச் செய்தும், திருமண  நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்தும் துன்புறுத்துவதாக கூறி முரளிதரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் யானையை வனத்துறையினர்,  முகாமிலோ, மிருகக் காட்சி சாலையிலோ வைத்து பராமரிக்கலாம் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்