மாடு முட்டியதால் கிணற்றில் தவறி விழுந்த 2 பெண்கள் : பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்
திருப்பத்தூர் அருகே 150 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த இரு பெண்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருப்பத்தூர் அருகே 150 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த இரு பெண்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன கந்திலி பகுதியை சேர்ந்த நிர்மலா மற்றும் முனியம்மாள் ஆகியோர் அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் அருகில் நடந்து சென்றுகொண்டு இருந்த போது மாடு முட்டியதில் தவறி கிணற்றில் விழுந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இருவரையும் கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனர்.