கீழடியில் 5-ஆவது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடக்கம் : அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5ஆவது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது.

Update: 2019-06-13 17:59 GMT
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5ஆவது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது. முன்னதாக முதல் 3 கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை மத்திய அரசு மேற்கொண்ட நிலையில், 4ஆவது கட்ட பணிகள் தமிழக அரசின் தொல்லியில் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டது. அகழ்வாராய்ச்சியில் சங்க கால தமிழா்கள் பயன்படுத்திய கண்ணாடி வளையல்கள், சுட்ட மண்ணால் ஆன ஓடுகள், யானை தந்தத்தில் ஆன முத்து மணிகள், உறை கிணறு, உள்பட மொத்தம்13 ஆயிரத்து 638 அரிய வகைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை கொண்டு அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. 5ஆவது கட்ட பணிகளை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், அருங்காட்சியகம் அமைக்க ஒரு ஏக்கர் நிலமும், ஒரு கோடி ரூபாய் நிதியும் தமிழக அரசு ஒதுக்கி உள்ளதாக தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்