அனுமதி இல்லாமல் நடைபெற்ற கட்டுமாடு மஞ்சுவிரட்டு...
ஜெயங்கொண்டநிலை மந்தை கருப்பர் சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு, அனுமதி இல்லாமல் கட்டுமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஜெயங்கொண்டநிலை மந்தை கருப்பர் சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு, கட்டுமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது. காவல்துறை மற்றும் வருவாய் துறை அனுமதி இல்லாமல் நடைபெற்ற இந்த மஞ்சு விரட்டில் 50க்கு மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அரசு அனுமதி இல்லாததால் மாடு பிடிவிரர்கள் யாரும் பங்கேற்கவில்லை. ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்ட மாடுகள் முட்டியதில் 5க்கும் மேற்பட்டவர்கள காயமடைந்தனர்.