ஜனசதாப்தி ரயிலில் ஏற்பட இருந்த பெரும் தீ விபத்து : முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தடுக்கப்பட்டது
மயிலாடுதுறையில் இருந்து கோவை சென்ற ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து புகை வந்ததையடுத்து ஆடுதுறை அருகே நிறுத்தப்பட்டது.
மயிலாடுதுறையில் இருந்து கோவை சென்ற ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து புகை வந்ததையடுத்து ஆடுதுறை அருகே நிறுத்தப்பட்டது. பின்னர் ரயிலை ஆய்வு செய்த அதிகாரிகள், D5 ரயில் பெட்டியின் கீழே இருந்த பிரேக்குகள் இறுகி அதில் இருந்து புகை வந்ததாகவும், ரயில் நிறுத்தப்பட்டு இருக்காவிட்டால் பெரும் தீ விபத்து ஏற்பட்டு இருக்கும் எனவும் தெரிவித்தனர். இதனையடுத்து அந்தப் பெட்டிக்குரிய அனைத்து பிரேக்குகளும் வண்டியின் இணைப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பின், 20 நிமிட தாமதத்திற்கு பிறகு ரயில் கோவையை நோக்கி புறப்பட்டது.