தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ சம்பள விவகாரம் : இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு

2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சேரன்மகாதேவி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வேல்துரை வெற்றி பெற்றார்.

Update: 2019-06-12 21:24 GMT
2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சேரன்மகாதேவி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வேல்துரை வெற்றி பெற்றார். அரசு ஒப்பந்த பணிகளை செய்து வந்ததையடுத்து அவரை தகுதிநீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பின் அடிப்படையில், 5 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக வேல்துரை பெற்ற சம்பளமான 21 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயை திரும்ப செலுத்த சட்டப்பேரவை செயலாளர் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து, வேல்துரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதனை விசாரித்த நிதிமன்றம், சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது வேல்துரை பெற்ற சம்பளத்தை திரும்ப பெறும் விவகாரத்தில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டது.
Tags:    

மேலும் செய்திகள்