ஆவலப்பள்ளி ஏரியில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்

ஒசூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால், ஆவலப்பள்ளி ஏரியில் நீர் நிரம்பி உள்ளது.

Update: 2019-06-08 21:30 GMT
ஒசூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால், ஆவலப்பள்ளி ஏரியில் நீர் நிரம்பி உள்ளது. இந்த ஏரிக்கு தற்போது வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த ஏரிக்கு வரும் வெளிநாட்டு பறவைகள் இரண்டு மாத  காலம் ஏரியில் முட்டையிட்டு குஞ்சு பொறித்த பின்பு மீண்டும்  சென்று விடுகிறது. இங்கு வரும் வெளிநாட்டு பறவைகள் வெள்ளை, கருப்பு, பிங்க் ஆகிய நிறங்கள் கலந்ததாகவும் கால்கள், அலகுகள் நீளமாகவும் உயரமாகவுடன் காணப்படுகின்றன. இந்த பறவைகளை ஆர்வமுடன் காணும் பொதுமக்கள், வெளிநாட்டு பறவைகள் ஏரி நீரில் தன் அலகை மூழ்கியபடி இறை தேடும் அழகு கண்கொள்ளா காட்சியாக உள்ளதாக கூறுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்