கங்கை நீருடன் சன்னியாசி ஒருவர் ராமேஸ்வரத்திற்கு வருகை

கங்கை நீருடன் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து அங்க பிரதிஷ்டை செய்தபடி சன்னியாசி ஒருவர் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்தார்.

Update: 2019-06-08 12:58 GMT
கங்கை நீருடன் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து அங்க பிரதிஷ்டை செய்தபடி சன்னியாசி ஒருவர் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்தார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கங்கோத்ரியில் இருந்து புனித கங்கை நீரை எடுத்துக்கொண்டு பரத்வாஜ் என்ற சன்னியாசி தன் பயணத்தை தொடங்கினார். கடந்த 2018 பிப்ரவரி மாதம் அங்க பிரதிஷ்டை  செய்த படி பேரணியை தொடங்கிய அவர், இன்று ராமேஸ்வரம் வந்தார். 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து இன்று அவர் மண்டபத்திற்கு வந்தார். உலக அமைதி மற்றும் நாட்டில் வளம் செழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த பயணத்தை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்