ரூ.600 கோடி செலவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் - அமைச்சர் மணிகண்டன்
ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தாகத்தைத் தீர்ப்பதற்காக சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் துவங்கப்பட உள்ளதாக அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தாகத்தைத் தீர்ப்பதற்காக சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் துவங்கப்பட உள்ளதாக அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார். ராமநாதபுரம் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12வது படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மணிகண்டன், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக மாவட்டம் முழுவதும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும் குதிரை மில்லி பகுதியில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் தொடங்க உள்ளதாக அமைச்சர் மணிகண்டன் கூறினார்.