ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு : பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-06-06 21:23 GMT
புதுக்கோட்டையைச் சேர்ந்த தேவி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தேசிய ஆசிரியர் கல்வி கழக விதிப்படி, SC/ST வகுப்பை சேர்ந்தவர்கள் குறைந்த பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று, கல்வியியல் பட்டம் பெற்றிருந்தால் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதலாம் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பின்படி பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன் கல்வியியல் பட்டம் பெற்றவர்களே ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுத இயலும் என்றும் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இதனால் SC/ST வகுப்பைச் சேர்ந்த பலர் ஆசிரியர் தகுதி தேர்வை எழுத இயலாத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். எனவே, பிப்ரவரி மாதம் அறிவித்த ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரவிசந்திரபாபு,  செந்தில்குமார்  ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இது குறித்து தமிழக  ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட் டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்