போதை மறுவாழ்வு மையத்துக்கு சீல் : உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டது கண்டுபிடிப்பு

தனியார் போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2019-06-06 21:02 GMT
திருச்சி கே.கே.நகரில், கடந்த 2011ம் ஆண்டில் இருந்து, இந்த தனியார் போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வந்துள்ளது. இங்கு சிகிச்சை பெற்று வந்த, கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காவல் நிலைய காவலர் தமிழ்ச் செல்வன், கடந்த ஒன்றாம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது குறித்து தமிழ் செல்வனின் உறவினர்கள் அளித்த புகாரை தொடர்ந்து, திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மனநலத்துறை பேராசிரியை நிரஞ்சனா தேவி தலைமையில் மருத்துவக் குழுவும், சமூக நலத்துறையினரும் அந்த மையத்தில் நேரடி ஆய்வு நடத்தினர். அப்போது, உரிய அங்கீகாரம் இல்லாமல் மையம் செயல்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின்படி, திருச்சி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் இணை இயக்குனர் சம்சாத் பேகம் முன்னிலையில், தாசில்தார் சண்முகவேல் தலைமையிலான வருவாய் துறையினர் மையத்தை பூட்டி சீல் வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்