ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம் : காவல்துறை இயக்குநரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவு
தஞ்சாவூர் டெல்டா பகுதியில் மீதேன் மற்றும் ஹைட்ரொ கார்பன் வாயு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிற்கும் வகையில், ஜூன் 12 ம் தேதி அன்று மரக்காணத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த லெனின் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்
தஞ்சாவூர் டெல்டா பகுதியில் மீதேன் மற்றும் ஹைட்ரொ கார்பன் வாயு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிற்கும் வகையில், ஜூன் 12 ம் தேதி அன்று மரக்காணத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த லெனின் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், இதுகுறித்து தமிழக காவல்துறை தலைவரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூன் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.