ஸ்டாலினுடன் இலங்கை எம்.பி., சந்திப்பு
இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் துணைத் தலைவரும் அந்நாட்டின் எம்பியுமான மாவை சேனாதி ராஜா, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார்.
இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் துணைத் தலைவரும் அந்நாட்டின் எம்பியுமான மாவை சேனாதி ராஜா, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவை சேனாதிராஜா, இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண, 13 -வது அரசியல் சட்ட திருத்தம் போதுமானது அல்ல என்றார். எனவே, வருகிற 9 - ம் தேதி, இலங்கை வரும் இந்திய பிரதமர் மோடியிடம் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு, வலியுறுத்துவோம் என்று மாவை சேனாதி ராஜா தெரிவித்தார்.