புதிய கல்வி கொள்கை : ஜூன் 22-ம் தேதி ஆலோசனை கூட்டம்
புதிய கல்வி கொள்கை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அழைப்பு விடுத்துள்ளது.
புதிய கல்வி கொள்கை திட்டத்தில் மும்மொழி கொள்கை பரிந்துரை செய்யப்பட்டதால் தமிழத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, புதிய கல்விக் கொள்கை பரிந்துரை குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்தது. இந்நிலையில், புதிய கல்வி கொள்கை குறித்து ஆலோசிப்பதற்காக, ஜூன் 22ஆம் தேதியன்று டெல்லியில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கையில் உள்ள சிறப்பம்சங்கள் மற்றும் அதில் உள்ள முரண்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்த கூட்டம் நடைபெற உள்ளது.