கடலூரில் ராணுவத்திற்கு நேரடி ஆள்சேர்ப்பு முகாம்
கடலூரில் ஜூன் 7-ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இந்திய ராணுவத்திற்கு நேரடி ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
கடலூரில் ஜூன் 7-ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இந்திய ராணுவத்திற்கு நேரடி ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் சென்னை, கடலூர், வேலூர், உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கலந்துகொள்ள ஆன்லைன் மூலம் 19 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் ஆள் சேர்க்கும் பணி நடைபெறும் இடத்தினை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் இந்திய ராணுவத்தினர் ஆய்வு செய்தனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய, கர்ணல் தரூண்தூவா ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் கணினி முறையில் நடைபெறுவதால் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.