மதுரை அருகே பைனான்சியர் கொல்லப்பட்ட வழக்கில் இளைஞர் சரண்

மதுரை அருகே பைனான்சியர் கொல்லப்பட்ட வழக்கில் இளைஞர் ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Update: 2019-06-04 18:19 GMT
மதுரை அருகே பைனான்சியர்  கொல்லப்பட்ட வழக்கில் இளைஞர் ஒருவர், நீதிமன்றத்தில் சரணடைந்தார். மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த இளங்கோவனின் 2 வது மனைவி  அபிராமி. இந்நிலையில் அபிராமியின் மகள் அனுசியாவுக்கு, இளங்கோவன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அபிராமி, கூலிப்படையை ஏவி கடந்த 31ம் தேதி இளங்கோவனை கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய கே.புதூரை சேர்ந்த மகேஷ்பாபு என்ற இளைஞர் மதுரை  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து அவரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் கவுதமன் உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்