சிவகங்கை அரசு மருத்துவமனையில் 3 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுமார் 3 மணிநேரம் மின்சாரம் இல்லாததால் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுமார் 3 மணிநேரம் மின்சாரம் இல்லாததால் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் 3 மணிநேரம் கழித்தும் வரவில்லை. இதனால் அவசர பிரிவு நோயாளிகளுக்கு செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் விபத்து ஏற்பட்டு சிகிச்சைக்காக வந்தவர்கள் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.