சேதமடைந்த சாலையை சீரமைப்பதில் தாமதம் : பள்ளி திறந்த முதல்நாளே விடுமுறை அறிவிப்பு

சிவகாசியில் சேதமடைந்த சாலையை, சீரமைப்பதில் நிலவும் தாமதத்தால், பள்ளி திறந்த முதல்நாளே, மாணவர்களுக்கு விடுமுறை விடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2019-06-03 10:41 GMT
சிவகாசியில் சேதமடைந்த சாலையை, சீரமைப்பதில் நிலவும் தாமதத்தால், பள்ளி திறந்த முதல்நாளே, மாணவர்களுக்கு விடுமுறை விடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சிவகாசியில், மானூர் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள், நடைபெற்று வருவதால் ஆறுமுக சாலை மற்றும் சண்முக சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. பள்ளி திறப்பதற்கு முன்பே, இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், தற்போது பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்குள்ள அரசு உதவி பெறும் ஆண்கள் பள்ளி ஒன்றில், சாலை சீரமைக்கப்படாததை காரணம் காட்டி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் பெண்கள் பள்ளிக்கு சென்ற மாணவிகள், மிகுந்த சிரமம் அடைந்தனர்.  பள்ளி மாணவ, மாணவிகள் அதிகளவில் பயன்படுத்தி வரும் இந்த சாலையை, விரைவில் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்