ஒரே தவணையில் பள்ளி கட்டணம் - பெற்றோர்கள் மறுப்பு
ஒரே தவணையில் பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவர்களை பள்ளி நிர்வாகம் வெளியேற்றியதை கண்டித்து பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
காஞ்சிபுரம் நசரத் பேட்டை பகுதியில் தொண்டு நிறுவனம் சார்பில் இயங்கிவரும் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். பள்ளி நிர்வாகம் பள்ளி கட்டணத்தை ஆண்டுதோறும் தவணை முறையில் பெற்றுக் கொண்டு வந்த நிலையில், நடப்பாண்டில் திடீரென முழுமையாக செலுத்த கூறியுள்ளனர். மேலும் பள்ளிக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை பள்ளி தொடங்கியுள்ள முதல்நாளான இன்று வகுப்புக்குள் அனுமதிக்கவும் மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் காஞ்சிபுரம் -வாலாஜாபாத் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பள்ளி நிர்வாகம் மாணவர்களை வகுப்புக்குள் அனுமதித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.