வருமான உச்ச வரம்பு ரூ.72 ஆயிரமாக உயர்வு : தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

தமிழக அரசினால் செயல்படுத்தப்படும் சில திட்டங்களின் கீழ் விண்ணப்பிப்பவர்களின் ஆண்டு வருமான உச்ச வரம்பை 72 ஆயிரமாக உயர்த்தி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-06-01 12:31 GMT
தமிழக அரசின் வளர்ச்சி திட்டங்களின் கீழ் மகளிர் நலத்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு இதுவரை 24 ஆயிரமாக இருந்தது. இது 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், சமூக நலத்துறையின் சார்பில் வழங்கப்படும் பல்வேறு நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வருமான உச்ச வரம்பையும் 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

இதன்படி ஏழை விதவைகளின் குழந்தைகளுக்கு இலவச பாடநூல் மற்றும் குறிப்பேடுகள் வழங்கும் திட்டம், தொழில் கூட்டுறவு சங்கங்களில் அங்கத்தினர் அனுமதி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் சேவை இல்லங்கள், தொழிற்பயிற்சி நிலையங்களில் அனுமதி மற்றும் மூன்றாம் பாலினர் நலத்திட்ட உதவிகள் ஆகிய திட்டங்களுக்கான வருமான உச்ச வரம்பு 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 
இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதல் பயனாளிகள் பயன்பெறுவார்கள் எனவும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்