பொறியியல் படிப்பில் சேர 1.33 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் : கடந்த ஆண்டை விட 27,000 ஆயிரம் மாணவர்கள் குறைவு

பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு நேற்றுடன் முடிந்த நிலையில், இறுதி நிலவரப்படி, ஒரு லட்சத்து 33 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

Update: 2019-06-01 09:23 GMT
பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு கடந்த மாதம் இரண்டாம் தேதி துவங்கி, நேற்றுடன் முடிவடைந்தது. இறுதி நிலவரப்படி , ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் அறிவித்துள்ளார்.கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம்  மாணவர்கள் விண்ணப்பித்திருந்த  நிலையில், இந்த ஆண்டு 27 ஆயிரம் மாணவர்கள் குறைவாக விண்ணப்பித்து உள்ளனர். ஒரு லட்சத்து 75 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ள நிலையில், ஒரு லட்சத்து 33 ஆயிரம் இடங்களுக்கு மட்டுமே மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்பு சேர்க்கையில் கடந்த ஆண்டு ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்