"பொய் பிரசாரத்தால் தோல்வி அடைந்தோம்" - தோல்விக்கு கே.பி.முனுசாமி விளக்கம்
பொய்யான வாக்குறுதிகளால் எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரரும், கிருஷ்ணகிரி மக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருமான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
பொய்யான வாக்குறுதிகளால் எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரரும், கிருஷ்ணகிரி மக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருமான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட பின், செய்தியாளர்களிடம் பேசிய கே.பி. முனுசாமி, எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தால் தோல்வி அடைந்தோம் என்றார். மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறாதது குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் என்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது, அவர் கூறினார்.
தமிழகத்திற்கான அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு நிச்சயம் வழங்கும் என்றும் கே.பி. முனுசாமி நம்பிக்கை தெரிவித்தார்.