சென்னை கடற்கரை- செங்கல்பட்டு - திருமால்பூர் இடையே நாளை முதல் மீண்டும் விரைவு மின்சார ரயில் சேவை

சென்னை கடற்கரை- செங்கல்பட்டு - திருமால்பூர் இடையேயான விரைவு மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்க உள்ளதாக சென்னை கோட்ட மேலாளர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-31 13:39 GMT
சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தை அடுத்து நிறுத்தப்பட்டு இருந்த சென்னை கடற்கரை- செங்கல்பட்டு - திருமால்பூர் இடையேயான விரைவு மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்க உள்ளதாக சென்னை கோட்ட மேலாளர் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவல் பறக்கும் ரயில் சேவையை அதிகரிக்கவும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் 8 பெட்டிகளுக்கு பதிலாக 12 பெட்டிகளுடன் ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்