சுற்றுலா பயணிகளை கவர புதிய திட்டம் : ரூ. 5 கோடி மதிப்பில் தொங்கு பாலம்
ஊட்டி ஃபர்ன்ஹில் பகுதியில் 25 ஹெக்டேரில் புதிய தோட்டக்கலை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
ஊட்டி ஃபர்ன்ஹில் பகுதியில் 25 ஹெக்டேரில் புதிய தோட்டக்கலை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் இரண்டு மலை முகடுகள் நடுவே பிரம்மாண்டமான தொங்குப்பாலம் மற்றும் ஏரி நீரூற்றுகள் அமைக்கப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால் விரைவில் தொங்குபாலம் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பூங்காவில் பிட்டோனியா , ஜெரோனியா, அன்ட்ரோனியம் போன்ற மலர்கள் பூக்க துவங்கியுள்ளதால் திறப்பு விழா கணும் முன்பே சுற்றுலா பயணிகளை தன்பால் இழுக்க துவங்கியுள்ளது உதகையில் அமைக்கப்பட்டுள்ள புதிய தோட்டக்கலை பூங்கா.