அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா ? - மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் திடீர் ஆய்வு

சென்னை புழல் அருகே உள்ள காவாங்கரை இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2019-05-29 21:33 GMT
சென்னை புழல் அருகே உள்ள காவாங்கரை இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, அனுமதிஇல்லாமல் யாரேனும் தங்கியுள்ளனரா, குடிநீர், கழிவுநீர்  போன்ற அடிப்படை வசதிகள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா உள்ளிட்ட விவரங்களை மக்களிடம் ஆட்சியர் கேட்டறிந்தார். ஆய்வின் போது  இந்திய அகதிகள் முகாம் கூடுதல் செயலாளர் கிருஷ்ண பகதூர் சிங், மறுவாழ்வு மைய இயக்குநர் தினேஷ் பொன்ராஜ் , ஆர் டி ஓ ராஜேந்திரன், ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்