"அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம்" - சென்னை மாவட்ட ஆட்சியர்

திருவள்ளூர் மாவட்டத்தில் 25 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக, சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-29 20:19 GMT
இது தொடர்பாக சென்னை ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி,  அனைத்து வகை பள்ளிகளும் பள்ளி கல்வித் துறையின் தடையின்மை  சான்று  மற்றும் அங்கீகாரம் பெற்றே செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சென்னை மாநகர பகுதியான அம்பத்தூர், மதுரவாயல், மாத்தூர் உள்ளிட்ட திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த 25  பள்ளிகள் தடையின்மை சான்று மற்றும் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் எனவும்,  அங்கீகாரமின்றி செயல்படும்  பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்  எனவும் சென்னை ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்